Sunday, April 8, 2012

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


 
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு நிறைந்த காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். 6.தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 10. பேசாமல் இருப்பதுஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. Best Regards, Dr.M.Sathick from Darulsafa

வாழைப்பழத்தின் மகிமை


 

[ வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ''ஹி'' இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.]
வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.
அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே.
வாழைப்பழத்தின் வகைகள்
ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
வாழைப்பழத்தின் மகிமை
o  நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழம் பக்கவாதத்தைத் தடுக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிடுவது மூலம் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை ஒரு சிலரால் தவிர்க்க முடியும் என்று வாழைப்பழம் பற்றி நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
o  பொட்டாசியச் சத்து நிறைய உள்ள பழம். 65 வயதுக்கு மேற்பட்ட 5.600 பேரிடம் ஹாவாயித் தீவில் நடத்தப்பட்ட ஆய்வில், உடம்பில் குறைந்த அளவு பொட்டாசியம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சிறுநீர் கழிக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. பொட்டாசியத்தை உடல் ஜீரணிப்பதை அத்தகைய மாத்திரைகள் தடுப்பதாகக் கூறப்படுகிறது.

o  டையயுரிட்டிக்ஸ் எனும் மாத்திரைகள் முதியவர்களால் உட்கொள்ளப்படுகின்றன. இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தவும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் அவை முதியவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதய நோயுள்ளவர்களுக்கும் அந்த மாத்திரை கொடுக்கப்படுகிறது. இதயம், நுரையீரல் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க அவை உதவுகின்றன.
o  டையயுரிட்டிக்ஸ் மாத்திரை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியச் சத்து இருந்தால் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கும். டையயுரிட்டிக்ஸ் மாத்திரை சாப்பிடுபவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பொட்டாசியம் கிடைத்தால் அவர்களுக்குப் பெரிதும் உதவும் என்கிறார் இந்த ஆய்வை நடத்திய ஹொனாலுலு மருத்துவர் டாக்டர் டேபரா கிரீன் கூறுகிறார். வாழைப்பழம் சாப்பிடுங்க என்கிறார் வேறு ஒன்றுமில்லை.
வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்து
வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. இன்று, விஞ்ஞானிகளும், சத்துணவு நிபுணர்களும், உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள்.
o  புரதம், நரம்புகள் தளராமல் இளமை நீடிக்க கால்சியம், இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து, இதயம் சீராய்ச் சுருங்கி விரிவடைய மக்னீஷியம், பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம், சோடியம் உப்பு, இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம், மூளை வளர்ச்சிக்கும், பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவைகளும் வாழைப்பழத்தில் உள்ளன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும், எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
o  மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
o  வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
o  நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.
o  நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.
o  வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
o  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
o  கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.
o  வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும்
o  வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.
o  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.
o  நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
o  நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.
o  வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
o  நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும், சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும். நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
o  சோடியம் குறைவாகவும், அதிகம் பொட்டாசியமும், கால்சியமும், இரும்பும் இருக்கிறது. மிக சுலபத்தில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை இருப்பதால் உடனடி சக்திக்கு நிறைய உதவும்.வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் போதும் என்கிறார்கள் உணவுத்துறை வல்லுநர்கள். இதை ''பேலன்ஸ்டு டயட்'' என்கிறார்கள். இதில் இருக்கிற ''செரடோனின்'' என்கிற பொருள் மன அழுத்தத்திற்கு உதவக்கூடியது.
o  என்னவென்று தெரிந்துகொள்ள முடியாத பல அலர்ஜிகளுக்கு, வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகைக்கு மிக நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் துரிதப்படுத்துகிறது.
o  வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ''ஹி'' இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.
100 கிராம் வாழைப்பழத்தில்:
நீர் 61.4%

மாவுச்சத்து 36.4.%
சுண்ணாம்புச்சத்து 0.01%
கரோட்லின் 78
மை.கிரிபோபிளேவின் _ 0.08 மி.கி.வைட்டமின் 'சி' 7 மி.கி.
புரோட்டின் 1.3%
கொழுப்பு 0.2%
இரும்பு 0.04%
தயமின் 0.05 மி.கி.
நியாசின் 0.5 மி.கி

விட்டமின் மாத்திரைகள் தேவைதானா?



யாரைப்பார்த்தாலும் விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும் "நல்ல விட்டமின் மாத்திரைகள் எழுதிக் கொடுங்கள்.' என்றே கேட்கிறார்கள். சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபாய் வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா?
இன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோகம் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது. ஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விட்டமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள். இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா?
இல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ். ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி இதழ் கூறுகிறது.ஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய விட்டமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.
உதாரணமாக புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.
அடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும். உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் ?
எடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.
காலத்திற்கு முன்பே நோயுற்று "இறைவனடி' சேர நேரிடும். உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.
பெரும்பாலான விட்டமின்
மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.
எனவே அடுத்த தடவை நீங்கள் விட்டமின் மருந்துகளை வாங்குமுன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள பரீசிலனை செய்யுங்கள். (மாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விஷயம் அதை நிறுத்த வேண்டாம்.)   - டாக்டர் எம்.கே. முருகானந்தன்

அதிக விட்டமின் மாத்திரைகளால்  எற்படும் எதிர் விளைவுகள்
பிள்ளைகள் அதிகமாக விட்டமின் மாத்திரைகளை உண்பதால் பல எதிர் விளைவுகளை சந்திக்க நேருகிறது என்று புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. விற்றமின் மாத்திரைகளில் இனிப்பை சேர்த்து தயாரிப்பதால் அதிகமான பிள்ளைகள் அவற்றை விரும்பி உண்கிறார்கள். இவ்வாறு விட்டமின் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் அவை பிள்ளைகளின் உடலில் எதிர்வினையாக செயற்பட்டு நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரு பிள்ளை என்றளவில் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு வருடத்தில் பல ஆயிரக்கணக்கான தொலைபேசிகள் விட்டமின் நஞ்சூட்டல்கள் குறித்து தமக்கு வருவதாகவும், அமெரிக்காவில் பல பிள்ளைகள் இத்தகைய பாதிப்பால் மடிந்துமுள்ளனர் என்றும் இந்த ஆய்வில் பங்கேற்ற டேனிஸ் வைத்தியர் கிம் டால்கொப் தெரிவித்தார்.
அளவுக்கு அதிகமாக விட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் சேர முடியாத சத்துக்கள் சிறுநீராக வெளியேறிவிடும் என்ற பழைய கருத்தில் ஒரு திருத்தத்தை உண்டு பண்ணும்விதமாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
விட்டமின் மாத்திரைகளை வாங்கும்போது இரும்புச்சத்து 8 மில்லி கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடிய மாத்திரைகளை வாங்கும்படியும், மாத்திரைகளை உயரமான இடத்தில் வைக்கும்படியும், ஒரு நாளைக்கு ஒரு மாத்திரையை மட்டுமே வழங்குங்கள் என்றும் பல அறிவுரை கூறும் இந்த ஆய்வு, விட்டமின் மாத்திரைகளை அளவோடு உட்கொள்வதை தவறென்று கூறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியதாகும்



விட்டமின் மாத்திரைகளுக்கு மாற்றாக சக்தி வாய்ந்த உணவு மருந்துகள் சோர்வை அகற்றும் பழம்நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது. மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.கருத்தரிக்க வழி!மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.அழகைத் தரும் கீரைகள்!கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன. பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.மலச்சிக்கல் தீர!பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!

ஆஸ்த்மா: வரும் முன் காப்போம்


ஆஸ்த்துமா என்பது என்ன ?
ஆஸ்த்மா நுரையீரல்கள பாதிக்க கூடிய ஒரு நோய். குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடிய ஒரு நோய். இதனால் அடிக்கடி இழுப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்பு கூட்டில் ஒரு இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்மா இருந்தாலும் ஒவ்வாமை ஏர்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருந்தால் வரக்கூடிய வாய்புகள் அதிகம் என்றாலும் ஆஸ்த்மா வருவதற்கு என்ன முக்கிய காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை.
அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே அன்றி குணப்படுத்துதல் இயலாது. கட்டுப்பாடில் இருக்கும் போது இழுப்பு, மூச்சு திணரல் வராமல் இருக்கும். நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்கு செல்வதோ விளையாடுவதோ தடை படுவதில்லை.
ஆஸ்த்மாவின் விளைவுகள்: அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு 12 மில்லியன் குழந்தைகள் ஆஸ்த்மா பாதிப்பால் தாக்கப்பட்டார்கள் (asthma aatack). கிட்டதட்ட 21 மில்லியன் பேர் ஆஸ்த்மா வால் சிரமப்படுகிறார்கள். பெற்றோருக்கு ஆஸ்த்மா இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வர 6 மடங்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்த்மாவை கண்டறியும் வழிகள்: ஆஸ்த்மாவை கண்டறிவது மிக கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவதும் இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது மருத்துவர் கேட்கும் சில கேல்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்துகொள்வார்கள்.
பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுதிணறல் இருக்கிறதா, வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருக்கிறதா, மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக உங்களால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்மா மருந்து எடுத்து கொள்வதற்கு முன், மருந்து எடுத்து கொண்டதன் பின் கணக்கிட்டு பார்க்க படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்மாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் சிறிய குழாய்கள் மூலம் செல்லுகிறது. ஆஸ்த்மா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முட்யாமல் தடைபடுகிறது. அதிக முயுக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இழுப்பில் முடியும். சிலசமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சு குழாய்களை விரிவாக்க முடியாவிட்டால், இறக்கவும் நேரிடும்.
ஆஸ்த்மா வரக்காரணங்கள்: சுற்றுப்புர சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். அமெரிக்கா போன்ற நகரங்களில் குளிர்காலம் முழுதும் சன்னல்கள் போன்றவை திறக்கப்படுவதில்லை என்பதால் சுழலும் காற்றில் மாசு, நுண்ணுயிர்கள் இவை வெளியேற வாய்ப்பு இருப்பதில்லை.
ஆஸ்த்மாவை எப்படி கட்டுபாட்டில் வைத்திருப்பது?
மருத்துவர் தரும் மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். அதேபோல சுற்றுப்புரத்தில் உள்ள மாசினை தவிர்க்க கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல், அல்லது வீட்டு சன்னல்களை திறந்து வைத்தல் போன்றவற்றை செய்யவும். ஆஸ்த்மாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சு குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவ ரின் அறிவுறையை பின்பற்றி கட்டுப்பாட்டுள் வைத்திருங்கள்.
முக்கிய காரணிகள்:
சூழலில் உள்ள சிகரெட் புகையின் மாசு; ஆஸ்த்மா உள்ளவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர் அருகாமையில் புகைப்பதை தவிர்க்க வேண்டும்.
தூசி: தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் இவற்றை அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். அதேபோல stuffed animal விளையாட்டு பொம்மைகள் கொடுக்காதீர்கள். வீட்டிற்கு வெளியே காற்றில் உள்ள மாசு: சில நிறுவனங்கள் வெளியேற்றும் புகை, கார் போன்ற வாகனங்களில் வெளியிடும் புகை போன்றவை ஆஸ்த்மா உள்ளவருக்கு ஆபத்தை வரவழைக்க கூடும்.
கரப்பான் பூச்சிகள் அடைசல் அதிகம் இருக்கும் இடத்தில் நிறைய இருக்கும். இவற்றை கொல்ல பயன் படுத்தும் மருந்தின் வீரியம் ஆஸ்த்மாவை வரவழைக்கூடியது. அதனால் வீட்டில் நீர் தேங்கி இருக்கும் இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.
செல்ல பிராணிகள் பூனை, நாய் போன்ற இவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. பிறகு அது ஆஸ்த்மாவில் கொண்டு விடும். எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடி உள்ள செல்ல பிராணிகலை படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து முடியை அகற்றுவது முக்கியம்.
பாசி : பாசி, மோல்ட் இவற்றை சுவாசிப்பதன் மூலம் அதிக ஆஸ்த்மா விளைவுகள் நேரலாம். வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியம்.
ஆஸ்த்மா நோய் அறிகுறி
வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாய் இந்நோய் உலகளவில் மக்களை பாதித்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும், 5,000 அமெரிக்கர்கள், மிக முக்கியமாய் வயதானவர்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இப்படி இறப்பவர்களின் எண்ணிக்கை, உலகளவிலே 180,000. இப்படி ஆஸ்த்மா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்ததன் காரணத்தை முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எனினும், இதுவரை உள்ள விபரங்களின் மூலம், ஆஸ்த்மாநோய் மேலைநாடுகளில் அதுவும் ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மிக அதிகமாய் பரவியிருப்பதாயும், ஆப்பிரிக்க மூலை முடுக்குகளில் சுத்தமாய் இந்த நோய் காணப்படுவதில்லை எனவும் தெரிய வருகிறது.
ஆஸ்த்மா நோய் கொண்ட தாயோ அல்லது தகப்பனோ, ஒரு குழந்தை ஆஸ்த்மா நோய் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்றிருந்தாலும், புள்ளிவிவரங்கள் மூலம், வம்சாவழி மரபை விட சுற்றுப்புற சூழலும், வளரும் வாழ்க்கை முறையும்தான் மிக அதிகமாய் ஆஸ்த்மா நோய்க்கு காரணமாய் இருப்பதாய் தெரிகிறது. முக்கியமாய் எந்தெந்த அம்சங்கள் ஆஸ்த்மாநோய்க்கு காரணமாய் இருக்கின்றன என நுண்மையாக இன்னும் தெரியவில்லை. காரணங்களாய் கருதக்கூடிய சிலவற்றில் மிக முக்கியமான ஒன்று - தற்போதைய குழந்தைகள் முந்தைய காலத்தவர்களை விட அதிகமாய் வீட்டுக்குள்ளும், வேறு கட்டிடத்துக்குள்ளும் நேரத்தை செலுத்துகிறார்கள் என்பது.
இப்படி நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் மிக அதிகமாய் வீட்டில் இருக்கக்கூடிய அலர்ஜி சம்பத்தப்பட்டவைகளினால் (தூசிகளில் வளரும் பூச்சிகள், எலி, கரப்பான் போன்றவைகள் உட்பட) பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முக்கியமான கருத்தின் படி, மேலை நாடுகளின் குழந்தைகளின் நுரையீரல் சம்பத்தப்பட்ட வியாதிகளின் தடுப்புச்சக்தி, வளரும் நாடுகளின் குழந்தைகளின் தடுப்புச்சக்தியை விட குறைந்ததாய் இருக்கிறது. மேலை நாடுகளிளுள்ள குழந்தைகள், பூச்சிகளின் அருகே வளர்ந்து பழக்கப்படாதவர்கள். எனவே, இவர்கள் மிக எளிதாக ஆஸ்த்மா நோய்க்கும், வேறு சில அலர்ஜி சம்பத்தப்பட்ட வியாதிகளுக்கும்
(hay fever and eczema) ஆளாகி விடுகிறார்கள்.
அநேகமாக, பாதி ஆஸ்த்மா நோய்க்காரர்கள் அலர்ஜி (குடும்ப வம்சாவழி சம்பத்தப்பட்டதாக இருக்கக்கூடியது) மூலமாக ஆஸ்த்மா நோய் அடைந்திருக்கிறார்கள். மீதப்பாதி, அலர்ஜி மூலம் இல்லாமல், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமல், வயதான பிறகு நோயடைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு, முதலில் சாதாரண ஜலதோஷமாய் இருந்து, படிப்படியாய், இழுப்பு வந்து, நாட்கணக்காய், மாதக்கணக்காய் சுவாசிக்க கஷ்டப்பட்டு ஆஸ்த்மா நோய் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த இரு விதமாய் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், மூச்சிழுக்கும் வழி சுருங்கிவிடுகிறது.
ஆஸ்த்மா நோய் குழந்தைகளிடம் அதிகமாய்ப் பரவி இருந்தாலும் - தற்சமயம் அமெரிக்காவில் இது ஒரு சாதாரண (ஏராளமானவர்களுக்கு வரக்கூடியதாய்) குழந்தை வியாதி - ஏகப்பட்ட வயதானவர்களும் ஆஸ்த்மா நோய்வாய்ப் பட்டிருக்கின்றனர். மேலும், இரசாயணத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களிடம், அந்த இரசாயணப் பொருட்களின் மூலமாகக் கூட ஆஸ்த்மா ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலுள்ள தொற்றுநோய் கிருமிகளிலுருந்து, உடற்பயிற்சி, குளிற்காற்று, உணர்ச்சி கொந்தளிப்பின் மற்றும் ஒசோன் போன்ற இராசாயனப் பொருட்கள் ஆஸ்த்மா நோயைத் துரிதப் படுத்துவையாக இருக்கின்றன.
இருந்த போதிலும், வெளிக்காற்றின் கிருமிகள் ஆஸ்த்மா நோய் உருவாக காரணம் என இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை. வாழும் ஊரின் ஏழ்மை சிறிது காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் போர்டோ ரிக்கோவைச் சேர்ந்தவர்களிடமும், ஆப்பிரிக்க வழி மக்களிடமும், ஆஸ்த்மா நோய் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. புகை பிடிப்பது ஆஸ்த்மா நோயை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது, பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்த்மா நோய் வருவதற்கு வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது. உடல் குண்டாக இருப்பது கூட ஆஸ்த்மா நோயுடன் சம்பத்தப் பட்டதுதான்.
இப்படி மிக ஏராளமான காரணங்களும், விவரங்களுடனும் ஆஸ்த்மா நோய் சம்பத்தப் பட்டிருப்பதால், விஞ்ஞானிகளால் இதுவரை இதன் முழுத்தன்மையை புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், இவர்கள் மிகச் சிறப்பாய் வேலை செய்து, Inhaled steroids போன்ற ஒருசில மருந்துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவும், வேறு சில புதிய மருத்துவ முறைகளும் சரியாகவும், தொடர்ந்தும் உபயோகப்படுத்தினால், ஆஸ்த்மா நோய் மூலமான சில இறப்புகளை தவிர்க்கலாம்.
அடிக்கடி மூக்கடைப்பா?
எல்லா வயதினருக்கும் மூக்கடைப்பு என்பது ஜலதோஷம் அலர்ஜி போன்ற சாதாரண காரணங்களால் ஏற்படுகிறது சில முக்கியமான காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு சிலருக்கு மூக்கினுள் உள்ள ''செப்டம்'' எலும்பு வளைந்து இருக்கும் இதனால் சுவாசப்பாதையில் எலும்பு குறுக்கிட்டு மூக்கடைப்பு இருக்கும் மூக்கினுள் இருக்கிற அந்த வளைந்த எலும்பை எஸ்.எம்.ஆர். முறையில் முழுவதுமாக அகற்றிவிடுவார்கள் இதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. என்ன... மூக்கு கொஞ்சம் கொள கொளவென்று ஆடிக்கொண்டிருக்கும்.
ஒரு பக்கம் படுத்தால் அந்தப் பக்கமாக மூக்கு சரிந்து இருக்கும் அவ்வளவுதான். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை இப்படி எலும்பை எடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சியையே பாதிக்கும் என்பதால் எஸ்.எம்.ஆர். முறை சிகிச்சை அவர்களுக்குச் செய்யப்படுவது இல்லை.
வளைந்த எலும்பைச் சரிசெய்கிற இன்னொரு முறை... "செப்டோ பியாஸ்டி" இதில் மூக்கு எலும்பு முழுவதையும் அகற்றாமல் எந்தப் பகுதி வளைந்திருக்கிறதோ அந்த இடத்தை மட்டும் மாற்றி நேர்செய்கிறார்கள் மூக்கடைப்புக்கான அடுத்த காரணம் "பாலிப்" என்கிற சதை.
"பாலிப்" என்கிற சதை வளர்ச்சியை "பீல்டுக்ரேப்ஸ்" என்பார்கள். உரித்த திராட்சைப்பழங்களைப் போல... கொத்துக் கொத்தாகத் தோற்றம் அளிப்பதால் இப்படி சொல்கிறார்கள் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-
மூக்கு ஜவ்வு, மினிக்கஸ் மெம்பரைன் போன்ற பகுதிகளில் அலர்ஜியாலோ, "காளான்" கிருமிகளாலோ இந்தச் சதை வளர்கிறது. இது வளர வளர சைனஸ் அறைகளின் வாசலை அடைக்கிறது. அதனால் சைனஸஸில் சளி தேங்கி, சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக "பாலிப்" மேலும் பெரிதாக வளரத் துவங்குகிறது.
இப்படி "பாலிப்" சைனஸ் என்று போட்டி போட்டுக்கொண்டு தொல்லை தொடங்கும்போது பேச்சு பாதிக்கப்படும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். வாசனை டேஸ்ட் பிரச்னைக்கும் ஆளாகிறார்கள். "பாலிப்" குறையைப் போக்குவதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்தும் இவர்கள் குணமாக வழியிருக்கிறது!
"பாலிப்" வளர்ச்சி உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை செய்கிறார்கள். பாலிப்களை மூக்கிலிருந்து பிரித்து எடுப்பதே சிறந்த வழி. இதை பாலிபெக்டமி என்கிறார்கள் அறுவைசிகிச்சை செய்து இந்த பாலிப்களை வேரோடு பறிக்க வேண்டும். இல்லையென்றால் திரும்பத் திரும்ப வளர ஆரம்பிக்கும். சி.டி. ஸ்கேன் மூலம் அதன் வேர்கள் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைக் கண்டுபிடித்து எண்டோஸ்கோபிக் முறையில் அதை அடியோடு அகற்றுவதே நிரந்தரதீர்வைத் தரும்.
சிலவகை பாலிப்கள் ஆஸ்பர்ஜில்லஸ் என்கிற காளான்களால் ஏற்படுகிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் இந்தச் சதையானது வளர்ந்து மூளைவரை பாய்ந்துவிடுகிறது. இந்தச் சிக்கலான கட்டத்தில் மிகத் திறமையான அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் மட்டுமே, சரியான முறையில் நோயாளிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்த "பாலிப்"களை அகற்ற முடியும்!
நம்முடைய முகத்தின் ஆபத்தான பகுதி எது தெரியுமா?
மூக்கை ஒட்டி அமைந்துள்ள அந்த முக்கோண ஏரியாதான். ஏராளமான ரத்தக்குழாய்கள் இந்த முக்கோணப் பகுதி வழியாகத்தான் மூளைக்குச் செல்கின்றன. இந்தப் பகுதியில் ஏதேனும் சின்ன ரத்தக்காயமோ புண்ணோ உண்டானால் கூட... அதன் கிருமிகள் உடனடியாக மூளைக்குச் சென்று மரணத்தையே ஏற்படுத்தலாம்.
மூக்கிலும் இதேபோல ஒரு ஆபத்தானபகுதி இருக்கிறது அது மூக்கின் உள்ளே மேல்பகுதி அதாவது மூளையின் அடித்தளத்தை தொட்டபடி செல்கிற சுவாசவழி. இதை ஆபத்தான மூக்குப்பகுதி என்கிறார்கள் எண்டோஸ்கோபிக் ஆபரேஷன்கள் மிக மிக கவனமாக செய்யப்பட வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மூளைப் பகுதியைத் துளைத்து பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.
என்னிடம் ஒரு கல்லூரி மாணவன் வந்தான்... அவனுக்கு மூக்கில் இந்த ஆபத்தான பகுதியில் பாலிப் வளர்ந்திருந்தது. கவனிக்காமலே விட்டதால் பாலிப் பெரிதாக வளர்ந்து இதனால் அவனது இரண்டு கண்களும் அகலத்தில் விலகி திரும்பியிருந்தது. இதுபோல் ஆவதற்கு "தவளைமுகம்" என்கிறோம். அந்த மாணவனுக்கு எண்டோஸ்கோபிக் முறையில் மூக்கில் ஆபரேஷன் செய்து "பாலிப்"பை நீக்கி, கண்கள் சரிசெய்யப்பட்டன.
நமக்குத் தெரிந்த சின்னச் சின்ன விஷயங்களாலும் மூக்கடைப்பு ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.
ஜலதோஷம்: வரும் முன் காப்போம்
எதெதற்கோ தடுப்பு ஊசி கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஜலதோஷத்துக்கு மட்டும் தீர்வே இல்லையா? என்று நீங்கள் பொருமித்தீர்த்திருக்கலாம். ஜலதோஷத்திற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சுலபமல்ல. காரணம், எட்டு வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருநூறுவகை வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தடுப்பதற்கும் சரி, குணமாவதற்கும் சரி, வைட்டமின் சி ஜலதோஷத்துக்கு மிகவும் ஏற்றது என்பது ஓரளவு உண்மை. அதற்காக வைட்டமின் சி மாத்திரைகளை எக்கச்சக்கமாக விழுங்கித் தள்ள வேண்டாம். இந்தச் சத்துக்களில் பெரும்பகுதி சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. தவிர, அதிக வைட்டமின் சி மாத்திரைகள் சிலசமயம் சிறுநீரகக் கற்கள் உண்டாவதற்கும் காரணமாக அமையலாம்.
புகைப்பவர்கள், குறைந்தது மழை ஸீஸனிலாவது, அதை நிறுத்திக்கொள்வது நல்லது. நமது மூச்சுக்குழாயில் ஸீலியா எனப்படும் மிக மெல்லிய ரோமங்கள் உண்டு. தொற்று நோய்க்கு எதிராகப் போராடுவதில் இவற்றுக்கு முக்கிய பங்குண்டு. சிகரெட் பழக்கம் இந்த ரோமங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. நாமே சிகரெட் பிடித்தால் தான் என்றில்லை. மற்றவர்கள் விடும் புகையை சுவாசித்தாலும் இந்தப் பாதிப்பு உண்டு.
நல்ல காற்றோட்டமான சூழ்நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் கிருமிகள் நிறைந்த அசுத்தக் காற்று மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுற்றி ஜலதோஷத்துக்கு வழிவகுக்கும்.
கைகளை அடிக்கடி கழுவுங்கள். அதுவும் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தால் இதை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜலதோஷம் பிடித்த ஒருவர் பயன்படுத்திய பேனா, தொலைபேசி ஆகியவற்றைக் கூட அவருடைய ஜலதோஷம் நீங்கும் வரையில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று கேட்டால், வேறு வழியில்லாதபட்சத்தில், கைக்குட்டையைப் பயன்படுத்தி அவற்றை உபயோகிக்கப் பாருங்கள்.
ஜாலியாக இருங்கள். ஜலதோஷக் கிருமிகள் உங்களோடு டூ விட்டுவிட வாய்ப்புண்டு. மற்றவர்களைவிட மனஇறுக்கத்தோடு இருப்பவர்களை ஜலதோஷக் கிருமிகள் தாக்கும் வாய்ப்பு நூறு சதவிகிதம் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மண்ணறை வாழ்க்கை

உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, "மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென" அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ, "மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது" என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை 'இல்லிய்யீனிலே' (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள "ஸிஜ்ஜீன்" (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ

இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)

இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.

(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)

இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.

கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.

யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் "என் இறைவன் அல்லாஹ்" என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் "என் மார்க்கம் இஸ்லாம்" என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.

(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். 'மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்' என்று அவர்களிடம் கூறப்படும்.
(புகாரி, முஸ்லிம்)

ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், "(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்" எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், "(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!" என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு "கீராத்" நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு "கீராத்" நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.

கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2.  அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.

கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்


தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

* இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களில் ஒருவர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாதம் ஒன்றுக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்கள் அனைவருமே 15-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* கடந்த ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 10982 பேரும் கேரளாவில் 11300 பேரும் கர்நாடகாவில் 10934 பேரும் ஆந்திராவில் 9433 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

* முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் மட்டும் நாள்தோறும் 32 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நமது நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வண்ணமயமான வாழ்விலிருந்து விடுபட்டு வெள்ளைத் துணியில் அடைக்கலம் தேடும் இவர்கள், தங்களின் வாழ்வை விட்டு ஒதுங்குவதற்கான காரணங்கள் என்னென்ன? ஒரு துண்டுக் கயிற்றிலோ,ஒரு துளி விஷத்திலோ இவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும்போது அவற்றுக்கான காரணத்தை நாம் அறியாமால் போவது ஏன்? அந்த மர்ம முடிச்சுதான் என்னவோ? தற்கொலைகள் நடைபெறுகின்றபோது அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய காவல் துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்டும் வேகம், பிறகு படிப்படியாகக் குறைந்து அந்த வழக்குகள் தூசு படிந்த கோப்புகளில் உறங்கிக் கிடப்பது ஏன்?

கடந்த 2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் 1.8 % 14 வயதுக்கும் கீழே உள்ள சிறுமியர்கள் ஆவர்.(இது சிறுவர்களின் விகிதத்தை விட அதிகமாகும்) 15 முதல் 30 வயது வரையுள்ளவர்களின் விழுக்காடு 25.7% ஆகும்.

பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களைக் குடும்பப் பிண்ணனி, சமூக சூழல் ஃஆகியவற்றை மையப் படுத்தி விவாதிக்க வேண்டியுள்ளது.

குடும்பம்

* தாய் தந்தையரின் அவசரகோல வாழ்க்கை 
* குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் இல்லாமை
* தவறு செயுதால் தன்னைப் பாதுகாக்க குடும்பத்தில் எவருமே இல்லை என்ற எண்ணம்
* எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்ற தாய்,தந்தை இருவரில் ஒருவரை மிக எளிதாக தனது ‘கைக்குள்’ போட்டுக் கொள்வதில் கிடைக்கின்ற வெற்றி.

நாகரிகச் சூழல்
* செல்பேசி கேமரா, இணையம் ஆகியவற்றின் தவறான பயன்பாடு
* போட்டி மனப்பாங்கு
* ஆடம்பர வாழ்வின் மீதான மோகம்
* தவறான ஆண்-பெண் உறவு
*பொருளாதார நெருக்கடிகள்

உளவியல் சார்ந்தவை
* உணர்ச்சிவசப்பட்டு நடுநிலை தவறுதல்
* பருவம் அடைகின்றபோது ஏற்படுகின்ற உளவியல் பிரச்சனைகள்
* தனிமை எண்ணம்
* அன்பு,காதல் ஆகியவை குறித்த தவறான புரிந்துணர்வு
* எதையும் சாமளிக்கின்ற திறமை இன்மை
* துக்கம், கவலை
உடல் சார்ந்தவை
* மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஹார்மோன்களின் காரணமாக உண்டாகும் வேதனை
* ஆரோக்கியமின்மை
*தீரா நோய்கள்
* அழகின்மை
அரசியல்-கல்வி சார்ந்தவை
* மாஃபியா ரவுடி கும்பலின் துணையுடன் நடைபெறுகின்ற விபச்சாரம்.
* விபச்சாரக் கும்பல்களுக்கு ஆதரவளிக்கும் பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கு
* ஊடகங்கள் தருகின்ற அதிகப் படியான முக்கியத்துவம்
* துன்புறுத்தப்படுதல்
* கல்வித் திட்டங்களில் ஒழுக்கப் பாடங்களை இணைக்காதது
* ஆரோக்கியமற்ற பள்ளிக்கூட சுற்றுப்புறம்
மொபைல் கேமராவில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி, வன் புணர்ச்சி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற முறையற்ற செயலகளில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்கள் அல்லர். இதன் பின்னணியில் பல விபச்சாரக் கும்பல்கள் உள்ளன.
மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி இந்தியாவில் 43000 கோடி ரூபாய் அளவுக்குப் பாலியல் தொழில் நடைபெறுகிறது. சுற்றுலா வளர்ச்சி எனும் பெயரில் அரங்கேற்றப்படுகின்ற செயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மஸாஜ் செண்டர்கள் என்னும் போர்வையிலும் அழகு நிலையங்களின் பின்னணியிலும் விபச்சாரக் கும்பல்கள் செயல்படுகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களைப் பாதுகாப்பது யார் தெரியுமா? அரசியல்வாதிகள்தாம். இவர்களின் செயல்களினால் சீரழிகின்ற பெண்கள் இறுதியாகத் தற்கொலை செய்து கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனை தடுக்க பள்ளி நிர்வாகம், பொற்றோர், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.விழிப்பு உணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். பெண்களின் கைப்பேசிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களையும் படங்களையும் அனுப்புகிற ஈனர்களைக் கண்டறிந்து கைது செய்யும் வசதியை செல்பேசி நிறுவனங்களே உருவாக்கித் தர வேண்டும். அத்தகையர்களின் சிம் கார்டுகளைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்களின் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருமுறை இவர்களின் வலையில் ஒரு பெண் சிக்கிவிட்டால் அதன் பாதிப்புகளை மனம் விட்டுப் பரிமாறிக் கொள்ள குடும்பத்திலோ பள்ளிக்கூடத்திலோ அவர்களுக்கு யாரும் இல்லை. பள்ளியிலேயே இதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஓர் ஆலோசனை மையத்தை நிறுவலாம்.
ஒழுக்கக் கல்வியை கல்வித் திட்டத்தில் இணைக்க வேண்டும். பாடத் திட்டத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மணவர்களின் செல்பேசி,கணினி, புத்தகங்கள் ஆகியவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கின்றோம் எனும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படாதவாறு இது அமைய வேண்டும் என் தற்கொலைத் தடுப்பு மைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தற்கொலைக்கான எண்ணம் இறுக்கமான வாழ்க்கை முறையிலிருந்துதான் தொடங்குகின்றது.குறிப்பாக சமூகத்தில் பெருகி வருகின்ற ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து எல்லாமே தொடங்குகின்றது. உலகம் அடைந்து வருகின்ற முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்காமல் விலகி இருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அன்று. கைவிட்டுப் போன நன்மைகளைப் பற்றிய, அமைதியும் நிம்மதியும் தவழுகின்ற குடும்ப அமைப்பு குறித்த விழிப்பு உணர்வே இன்று நமக்கு தேவை.

நன்றி: சமரசம்
படம் கூகுள்

Thursday, April 5, 2012

தைராய்டு பற்றிய தகவல்கள் ..!

தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?
கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான். இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.
தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?
நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.
காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் டாக்டர்? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?
ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.
தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?
தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.
தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.
1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.
ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.
உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு?
பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.
தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?
குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.
1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.
அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்?
இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
இந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.
சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?
பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.
இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.
படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.
தைராய்டில் புற்றுநோய் வருமா?
தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.
1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்.
-நன்றி மற்றும் தகவல் : இன்று ஒரு தகவல்.

உடல் நலம்,

நெஞ்சு சளி
     தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
     ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
     சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
     நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
     சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
     கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
     ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
     மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
     வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
     வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
     செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
     மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
     கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
     சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
     கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
     வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
     கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
     வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
     ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
     எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

மார்புச் சளி
     வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
சளிக் காய்ச்சல்
     புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
     பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி
     பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
     வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
வயிற்றுப் போக்கு
     சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.
வாயுக் கோளாறு
     மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.
 

நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து  சிப்ஸ் தயாரித்து விற்று  நல்ல லாபம் அடைந்து வருகிறோம் என்று கூறுகிறார் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுந்தரம். அவர் கூறியதாவது:
45 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 8 ஆண்டாக ரசாயன உரம் தவிர்த்து முழுமையான இயற்கை உரம் மூலம் நேந்திரன் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையால் இடுபொருள் செலவு குறைவு.  மகசூல் அதிகம். உற்பத்தியாகும் பொருளும் ஆரோக்கியமானது. பகலில் உழைத்து, இரவில் காவல் காத்து அறுவடை செய்தால், அதற்குண்டான விலை கிடைப்பதில்லை. ரசாயன உரத்தால் தயாராகும் விளைபொருளுக்கு என்ன விலையோ அந்த விலைதான் கிடைக்கிறது. வாங்குபவர் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது. போட்டி நிறைந்த வாழைத்தார் நேரடி விற்ப னையை தவிர்த்து, வாழைக் காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் பலன் உண்டு. இதனால் நேந்திரன் வாழைக்காயை சிப்ஸாக தயாரிக்க முடிவெடுத்தேன். 

3 ஏக்கர் நிலத்தில் விளையும் நேந்திரன் வாழைத்தார் மட்டும் சிப்ஸ் தயாரிப்புக்கு போதாது என்பதால், இயற்கை விவசாயம் மூலம் நேந்திரன் தயாரிக்கும் மற்ற விவசாயிகளையும் சேர்த்து கூட்டாக சிப்ஸ் தயாரிக்கிறேன். மாருதி ஆர்கானிக் பார்ம்ஸ் நிறுவனத்தை துவக்கி, தமிழ்நாடு இயற்கை விவசாய வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளோம். நிறுவனத்தில் மேலும் இப்பகுதியில் உள்ள இயற்கை நேந்திரன் வாழை விவசாயிகளையும் இணைத்து கூடுதலாக தயாரிக்க உள்ளோம். சிப்ஸ் தயாரிப்புக்கு இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தேங்காயில் இருந்து பிழியப்பட்ட எண்ணெயை பயன்படுத்துகிறோம். நேந்திரன் வாழைத்தாரை மதிப்பு கூட்டப்பட்ட சிப்ஸாக விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. வாழைத்தாராக விற்றபோது ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவிக்கப்படும் விளைபொருளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் நல்ல லாபம் பெறலாம். 

கட்டமைப்பு, முதலீடு: நான்கு  தூண்கள் நட்டு ஷெட் அமைக்க வேண்டும் (செலவு-ரூ.10,000). அதில் மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு கட்ட வேண்டும். (ரூ. 3000) இரும்பிலான எண்ணெய்  சட்டி 1 ( ரூ.1,750), கரண்டி, எண்ணெய் வடிகட்டி சட்டி 2, வாழைக்காய் சீவும் கருவி 2, உரித்த வாழைக்காய் அலச வாளி 2, பொரித்த சிப்ஸ் வைக்க பிளாஸ்டிக் கூடை 2 ஆகியவை வேண்டும் (ரூ.2,250.)  எடை மெஷின் ரூ.3,500, சீலிங் மெஷின் ரூ.3000 என மொத்த முதலீடு ரூ.23,500.

கிடைக்கும் இடங்கள்: அடுப்பை கட்டிட தொழிலாளர்களே கட்டி கொடுப்பார்கள். அடுப்பு எரிக்க மரத்தூள், கடலை தோல், முந்திரி தோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவை எளிதில் கிடைக்கிறது. நேந்திரன் வாழைக்காய்களை விவசாயம் செய்யாதவர்கள், அவற்றை சந்தை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் ஏலங்களில் கொள்முதல் செய்யலாம். இதர பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கிறது.

உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நாளைக்கு 50 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். அதற்கு 150 கிலோ நேந்திரன் வாழைக்காய் வேண்டும். கிலோ சராசரி விலை ரூ.16 வீதம் ரூ.2,400, தேங்காய் எண்ணெய் 1 டின் 17 கிலோ  ரூ.2,380, எரிபொருள் கிலோவுக்கு ரூ.7 வீதம் ரூ.350, நேந்திரன் சிப்ஸ் பொரிக்கும் தொழிலாளர் கூலி 2 பேருக்கு மொத்தம் ரூ.600, பேக்கிங் செலவு ரூ.150 என மொத்தம் ரூ.5,880. (ஒரு கிலோ சிப்ஸ் சராசரி உற்பத்தி செலவு ரூ.118). 

வருவாய் (ஒரு நாளைக்கு):  நேந்திரன் சிப்ஸ் ஒரு கிலோ குறைந்தபட்சம் கிலோ ரூ.160, அதிகபட்சம் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாய் ரூ.8,000. குறைந்தபட்ச லாபம் ரூ.2,120, அதிகபட்ச வருவாய் ரூ.9,000. அதிகபட்ச லாபம் 3,120.

சந்தை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகளில் இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் பிரிவுகள் தனியாக உள்ளன. அங்கு விற்பனை செய்யலாம். அதோடு வழக்கமான சிப்ஸ்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் விற்கலாம். தரமான நேந்திரன் சிப்ஸ், கடைகளில் சில்லரை விலையாக கிலோ ரூ.250 முதல் ரூ.260 வரை விற்கின்றனர். உற்பத்தி செய்பவர்களிடம் ரூ.160 முதல் ரூ.180க்கு கொள்முதல் செய்வதால் அவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. தரமான சிப்ஸ்களுக்கு வரவேற்பு உள்ளது. சிப்ஸ்கள் 2 மாதம் வரை கெடாது. ருசியும் பலருக்கு பிடிப்பதால் சந்தை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். 

தயாரிப்பது எப்படி?

நேந்திரன் வாழைக்காய்கள் பச்சையாக இருக்க வேண்டும். சிறு கத்தியால் வாழைக்காயின் மேல் இருந்து கீழாக தோலில் கீற வேண்டும். கீறிய தோலுக்குள் உள்ளே கத்தியை நுழைத்து காய்க்கும், தோலுக்கும் இடையே நெம்ப வேண்டும். பின்னர் கை விரல்களால் நெம்பினால் தோலை முழுதாக உரித்து விடலாம். பின்னர் அதை நல்ல தண்ணீரில் அலசிய பின், காய்ந்த எண்ணெயில் நேரடியாக வட்டமாக சீவி போட வேண்டும். எண்ணெயில் விழும் நேந்திரன் துண்டுகள் பொரியும் போது சத்தம் வரும், அது லேசாக அடங்கும் போது ஒரு குழிக்கரண்டியில் உப்புத் தண்ணீரை அள்ளி எண்ணெயில் ஊற்ற வேண்டும். சட்டியில் சிப்ஸ் மீண்டும் சத்தத்துடன் பொரியும். சத்தம் அடங்கிய பின், சிப்ஸ்களை கரண்டியில் அள்ளி, தூக்கிப்போட்டு பிடித்தால் சலசலவென சத்தம் கேட் கும். அப்படி கேட்டால் நன் றாக வெந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதை வடிகட்டி சட்டியில் போட்டு சில நிமிடங்களுக்கு பிறகு அதை, 200, 250 கிராம் வீதம் எடை போட்டு பேக்கிங் செய்யலாம்.

மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... நேந்திரன் சிப்ஸ் தயாரிப்பில் கலக்கும் தம்பதி !


ஜி.பழனிச்சாமி

நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான், 
விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி!

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

வழிகாட்டிய நண்பர்! 

தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம்கிறதால, 24 வருஷமா வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு பகுதியா பிரிச்சு, சுழற்சி முறையில வெள்ளாமை பண்றேன். அதனால எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருஷத்துக்கு முன்ன நண்பர் ஒருத்தர் மூலமா பஞ்சகவ்யா பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போ, நல்ல பலன் கிடைச்சதால, இயற்கை வழி விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை! 

அந்த சமயத்துல கோயம்புத்தூர்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைச்சுது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருஷத்துல அருமையான மாற்றம் தெரிஞ்சது.

மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில நோய்த் தாக்குதலே இல்லாம... காயெல்லாம் திரட்சியா காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போ... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கைக்கு மாறின பிறகு... பதினஞ்சு டன் மகசூல் கிடைச்சுது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமா கிடைக்கவே... சந்தோஷமா நகர ஆரம்பிச்சுது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்! 

என் தோட்டத்துல விளையற வாழையில குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனா, அவர் கூடுதலா கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால... உடனடியா, சிப்ஸ் தயாரிப்புல இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை! 

''ஆரம்பத்துல இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால, தேங்காய் எண்ணெயில இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளா பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம்.

நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில விளைஞ்சதால சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்! 

''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகள்ல ஆர்டரும் கொடுத்தாங்க.

அடுத்த வாரத்துல நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்! 

15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தார்ல இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு : கே.ஆர். சுந்தரம், 
செல்போன்: 96009-16166
thanks vikatan
Engr.Sulthan